Friday 7 June 2019

பைசாசம் - கோகுல் சேஷாத்திரி - புத்தக விமர்சனம்


திகில் நாவல்கள் என்றும் எனக்கு பிடித்தமான ரகம். கோகுல் சேஷாத்ரி என்ற எழுத்தாளரின் படைப்புகள் ஏதும் நான் படித்ததில்லை என்றாலும் பைசாசம் என்ற அந்த தலைப்பே இந்த புதினத்தை படிக்க தூண்டியது. இதை வரலாற்று புதினம் என்று எழுத்தாளரே சொல்லியிருக்கிறார்.

கதைகளம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கோளக்குடி என்ற ஊர். ஊருணியில் இருந்து தண்ணீர் எடுக்க போன பெண்மணி ஒருவள் ஒரு ஆவியை எதிர்கொள்கிறார். ஒரு வருடம் முன்னாள் இறந்த மூவேந்தனுடைய பைசாசம் என்று ஊர் பூசாரி சொல்ல எல்லோரும் அச்ச படுகிறார்கள். ஊர் காவலனான திருவரங்கனுக்கு அந்த பைசாசத்தின் தன்மையின் மேல் சந்தேகம் ஏற்பட அதை விசாரிக்க தீர்மானம் செய்கிறான். எங்கும் ஒரு வழி பிறக்காததால் தன்  குருவின் உதவியை நாட, அவர் அந்த ஊருக்கு வருகிறார். அவுங்களுக்கு எதாவது துப்பு கிடைக்கிறதா, இது உண்மையில் பைசாசத்தின் வேலையா என்று கண்டறிவதே இக்கதையின் சாராம்சம்.

முன்னே சொன்னது போல் இது ஒரு வரலாற்று புதினம். புதினத்தினூடே வரலாற்றை அறிகின்றோம். பொதுவாக வரலாற்றை சார்ந்த கதை என்றாலே அதில் இரு தேசங்கள், ராஜாக்கள், போர், காதல் என்று கதை நகரும். இங்கு அப்படி ஒன்றும் இல்லாமல் ஒரு ஊரில் நடக்கும் பைசாச சம்பவமும் அதனை சார்ந்து நடக்கும் விசாரணைகளும் தான் களம். இந்த நடையே சற்று புதிதாக தென்படுகிறது வாசகனுக்கு. எழுத்தாளர் அந்த கோளக்குடியின் அமைப்பையும், கதை நடக்கும் அந்த ஊரிலுள்ள இடங்களின் புகைப்படங்களும் விரிவாக காட்டி ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கின்றார். ஒரு வாசகனால் அந்த இடத்தினுள் நன்றாக சஞ்சரிக்க முடிகிறது. வெறும் வரைபடங்களும் புகைப்படங்களும் மட்டுமன்றி எழுத்தாளர் அந்த இடங்களை பற்றி மிகவும் அழகாக வர்ணித்திருக்கிறார்.

கைப்பிடி அளவுக்கு சில முக்கிய பாத்திரங்களே உள்ள போதும் கதை முழுதும் நிறைந்து நிற்கின்றனர். அவர்களது பாத்திரங்கள் நல்ல அழுத்தமாக வரையப்பட்டிருகிறது. சின்ன சின்ன விஷயங்கள் கூட ஆழமாக சொல்ல பட்டிருக்கிறது. இருந்தாலும் விறுவிறுப்பான கதைக்களத்தில் வரலாற்று தகவல்கள் சில வாசகர்களை சலிப்படைய செய்யலாம். கதையின் ஓட்டத்தில் காதல், நட்பு, நம்பிக்கை, அவநம்பிக்கை என்று பலவற்றை சரியான அளவில் சொல்ல முயல்கிறார் கோகுல். அந்த காலத்து வாழ்க்கையை, தகுந்த இடங்களில் ஆதாரங்களோடு சொல்ல எழுத்தாளரால் முடிகிறது. ஆனால் கதையின் முடிவு எல்லோராலும் ஏற்கப்படுமா என்பது சந்தேகமே!

வரலாறு என்பது என்னை எப்போதும் கவர்ந்த ஒரு விஷயம்ஒரு நாட்டினுடைய அல்லது மனிதர்களுடைய வரலாற்றை அறியும் நோக்கத்தில் நாம் காலாத்தை பின் சென்று நோக்குவது என்பது நமக்கு பல விஷயங்களை கற்று தரும். இந்த படைப்பு எனக்கு ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது. புதினத்தினூடே வரலாற்றையும் சுவைக்க முடிந்தது. கதையின் முடிவு எப்படி வாசகர்கள் ஏற்றுப்பார்கள் என்று சொல்ல தெரியாத போதும் இது எல்லோராலும் ரசிக்க முடிந்த ஒரு படைப்பே என்பதற்கு எதுவும் சந்தேகம் இல்லை.

Book-o-Meter

2 comments:

  1. நல்ல ஒரு விமர்சனம். வரலாறு மற்றும் பைசாசம் என்ற இரண்டு வகைகளை சேர்த்த ஒரு புதினம் ஒரு புதிய முயற்சிதான். விமர்சனத்தை பொறுத்தவரை எழுத்துப்பிழை சிலது உள்ளது. உதாரணத்திற்கு அவுங்களுக்கு என்ற சொல்லுக்கு பதில் அவர்களுக்கு என்று எழுதியிருக்கலாம். ஏற்றுப்பார்கள் கூட சரியான சொல்லாகத் தோன்றவில்லை. ஏற்றுக்கொள்வார்கள் என்பது தான் சரி என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Correct. Flow la slang vanthidichu. Athaan

      Delete