Showing posts with label MyFavSongs. Show all posts
Showing posts with label MyFavSongs. Show all posts

Thursday, 29 March 2018

என் வாழ்க்கை பாதையில் சுவைத்த பாடல்கள் – 3

நேற்றைய தினம் ஆபீஸ் முடித்து விட்டு வீடு திரும்பும் வழியில் டிராபிக் ஒன்றில் மாட்டி கொண்டேன். அந்த நெரிசலில் காத்திருக்கையில் பல விஷயங்கள் மனதில் ஓடி கொண்டிருந்தன. இசை ஞானியின் குரல் மிக அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியது. “அமைதியான நதியினிலேபாடலோ மனதிற்கு அமைதி தந்தது. அனால் இந்த பாடல் மீண்டும் அந்த மனதை, கடலுக்கும் மண்ணுக்கும் இடையிலே ஓடி விளையாடும் நண்டு போல் பர பரப்பாக்கியது. நான் ஒரு சினிமா பைத்தியம். இது வரை நான் பார்த்த அணைத்து மொழி திரைப்படங்களிலும், பிடித்தமான ஒரு படம் என்றால் அதுகற்றது தமிழ்தான். மனித உணர்வுகளை மிக அழகாகவும் ஆழமாகவும் பிரதிபலித்த ஒரு படம். சுமார் ஒரு இருபது முறை பாத்திருப்பேன். இருந்தும் புதிய படம் போல் இன்றும் பார்த்து ரசிக்கிறேன்.
யுவன் இசையில் நா.முத்துகுமாரின் வரிகளை இசை ஞானி தன் குரலால் உயிர்பித்த அந்த பாடல் – “பறவையே எங்கு இருக்கிறாய்”. ஏன் என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. அனால் அவருடைய குரலில் அந்த பாடல் கேட்கையில் மனதிற்குள் எதோ ஒரு வலி. வாழ்கையில் சந்தித்த வேதனைகளும் கீறல்களும் அந்த குரல் தட்டி எழுப்புகிறது. நா.மு-வின் பெரிய ஒரு ரசிகன் நான். அதற்கு காரணம் இந்த படத்தின் பாடல்களே. ஒரு சில வரிகளில் எத்தனையோ விஷயங்களை சொல்லி அதை மனதில் உருக்கமாக பதிய வைத்திருக்கிறார் அவர். அனால் பல தடவை ராஜா சார்-இன் குரல் அந்த வரிகளை ரசிக்க முடியாமல் செய்கிறது…. அந்த கனத்த குரலில் முழுவதுமாய் வலியை பதிக்கிறார். யுவனும் அவரின் குரல் கலையாத படி இசைக்கு மெல்லினம் ஊடியிருக்கிறார்.
ஏழை காதல்
மலைகள் தன்னில்தோன்றுகின்ற
ஒரு நதியாகும்
மண்ணில்
விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் நதி ஆகிடும்
இதோ இதோ இந்த பயணத்திலே
இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்

இந்த காலத்தில் இப்படி பட்ட அழகு வரிகளை கேட்பது மிக அரிது.
இந்த அழகு வரிகளையும் ராஜாவின் குரலையும் உள்வாங்கி சில சொட்டு கண்ணீரை வெளியேற்றி எனது பயணத்தை தொடர்ந்தேன். வாழ்க்கை எனும் அந்த பரிசல் எந்த நதியில் பயணிக்கும் என்று அறியாமல்

என் வாழ்க்கை பாதையில் சுவைத்த பாடல்கள் – 2

சிறு வயதில் அப்பா எனக்கு ரேடியோ-வில் போட்டு கேட்க வைத்த முதல் பாடல்நான் மிகுந்த மரியாதையை கொண்டிருக்கும் அந்த கவியரசரின் தேன் ததும்பும் வார்த்தைகள்சிவாஜி, தேவிகா அவர்களின் நடிப்பு, உணர்ச்சி பொங்கும் கண்கள்மெல்லிசை மன்னரின் இசைஅதற்க்கு மெருகூட்ட ஒலிக்கும் சௌந்தரராஜன், சுசீலா அவர்களின் பளிங்கு குரல்கள்
ஆண்டவன் கட்டளைஎன்ற படத்தில் வரும் அழகான வரிகள் பாடல் அது
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அந்த பாடல் படமாக்க பட்ட விதம் என்னை மிகவே கவர்ந்ததுஅதிலும் அரசரின் வரிகள்…. கேட்கிறபோது இவ்ளோ தானா வரிகள் என்றாலும், அந்த வரிகளில் பற்பல அர்த்தங்களை காணலாம்…. எப்படி பட்ட சோகத்திலோ துயரத்திலோ இருந்தாலும் என்னை மன நிம்மதிக்கு இழுத்து செல்லும் பாடல் இதுஇந்த பாடலை கேட்கும்போது எண்ணற்ற நினைவுகள் அலையடிக்கின்றனமுதல் முதலாக கேட்ட பாடல். மழை காலத்தில் பாடலை கேட்டு காகித கப்பல் செய்து விளையாடுவது, வீட்டில் வாங்கின திட்டல்களும் அடிகளும்  என பல நினைவுகள்.
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்என்ற வரிகளின் சுவையே தனிபல பெரிய விஷயங்களை சர்வ சாதாரணமாய் வரிகளில் பதிக்கும் தன்மை கண்ணதாசனையே சாரும்அதே நேரம் மெல்லிசை மன்னரின் இசையையும் மறக்க தகாது.
இரவொன்றில் அந்நாள் கவலைகளை மறக்க நான் தேடும் முதல் நண்பன், மருந்து எல்லாமே இந்த பாடலே…. இசையை விட சிறந்த ஒரு மருந்து வேற ஒன்று உண்டா என்ன!!!

என் வாழ்க்கை பாதையில் சுவைத்த பாடல்கள் – 1

நான் தான் நிறைய பாடல்களை கேட்கிறேனே, பிடித்த பாடல்களை பற்றின ஒரு தொகுப்பு எழுதினால் என்னவென்று ஒரு யோசனை. எனக்கு பிடித்த பாடல்கள் பற்றியும், எனது கருத்துக்களை பற்றியும் இங்கு சொல்லியிருக்கிறேன்
எனது முதன்மை தோழர்களில் சிறந்தவன் என்றால் அதை எனது தனிமை தான் என்று சொல்லுவேன். தனிமை விரும்பியாகவே இருந்து விட்ட எனக்கு பாடல்கள் என்பவர்கள் பெரிதும் கவர்ந்த நண்பர்கள் ஆயினர். அதிலும் கவியரசரின் வரிகள் மற்றும் இசை ஞானியின் இசையுண்டு மலர்ந்த பாடல்கள் என்னை நான் என்ற மனிதன் ஆக்கியது.
என் சந்தோஷங்கள், கவலைகள், வலிகள், துன்பங்கள், கனவுகள் என்று எல்லாத்திலும் பங்கு கொண்ட பாடல்கள் மற்றும் இசை ஞானிக்கும் கவியரசருக்கும் இந்த தொகுப்பு சமர்ப்பணம்….
அப்படி தனிமையை தழுவும் தருணங்களில் ஒரு மனிதன் ஆட்கொள்ளும் எண்ணங்களும் சிந்தனைகளும் பலஅப்படி பட்ட பொழுதுகளில் நான் என்ன மன நிலையில் இருந்தாலும், எனது மனம் என்று குரங்கிற்கு நிம்மதியும் அமைதியும் தருவது இந்த பாடல்கள் தான்.. பல பொழுதும் நான் யோசித்திருக்கிறேன் அப்படி என்னை தான் அதில் தந்திரம் இருக்கின்றது என்றுஎன்னவென்று விடை இன்னும் காணவில்லைஎன்றாலும் மனம் எவ்வளவு குழப்பத்தில் கலங்கி கிடந்தாலும் ஒரு சொட்டு அமைதியை தந்து சந்தோஷத்தை தூண்டும் ஒன்று அது
அடுத்த தொகுப்பில் பேசுகிறேன் என் வாழ்கையில் என்னுடன் பிரயாணம் செய்யும் அந்த நண்பர்களை பற்றி.