நேற்றைய தினம் ஆபீஸ் முடித்து விட்டு வீடு திரும்பும் வழியில் டிராபிக் ஒன்றில் மாட்டி கொண்டேன். அந்த நெரிசலில் காத்திருக்கையில் பல விஷயங்கள் மனதில் ஓடி கொண்டிருந்தன. இசை ஞானியின் குரல் மிக அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியது. “அமைதியான நதியினிலே” பாடலோ மனதிற்கு அமைதி தந்தது. அனால் இந்த பாடல் மீண்டும் அந்த மனதை, கடலுக்கும் மண்ணுக்கும் இடையிலே ஓடி விளையாடும் நண்டு போல் பர பரப்பாக்கியது. நான் ஒரு சினிமா பைத்தியம். இது வரை நான் பார்த்த அணைத்து மொழி திரைப்படங்களிலும், பிடித்தமான ஒரு படம் என்றால் அது “கற்றது தமிழ்” தான். மனித உணர்வுகளை மிக அழகாகவும் ஆழமாகவும் பிரதிபலித்த ஒரு படம். சுமார் ஒரு இருபது முறை பாத்திருப்பேன். இருந்தும் புதிய படம் போல் இன்றும் பார்த்து ரசிக்கிறேன்.
யுவன் இசையில் நா.முத்துகுமாரின் வரிகளை இசை ஞானி தன் குரலால் உயிர்பித்த அந்த பாடல் – “பறவையே எங்கு இருக்கிறாய்”. ஏன் என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. அனால் அவருடைய குரலில் அந்த பாடல் கேட்கையில் மனதிற்குள் எதோ ஒரு வலி. வாழ்கையில் சந்தித்த வேதனைகளும் கீறல்களும் அந்த குரல் தட்டி எழுப்புகிறது. நா.மு-வின் பெரிய ஒரு ரசிகன் நான். அதற்கு காரணம் இந்த படத்தின் பாடல்களே. ஒரு சில வரிகளில் எத்தனையோ விஷயங்களை சொல்லி அதை மனதில் உருக்கமாக பதிய வைத்திருக்கிறார் அவர். அனால் பல தடவை ராஜா சார்-இன் குரல் அந்த வரிகளை ரசிக்க முடியாமல் செய்கிறது…. அந்த கனத்த குரலில் முழுவதுமாய் வலியை பதிக்கிறார். யுவனும் அவரின் குரல் கலையாத படி இசைக்கு மெல்லினம் ஊடியிருக்கிறார்.
“ஏழை காதல்
மலைகள் தன்னில்தோன்றுகின்ற
ஒரு நதியாகும்
மண்ணில்
விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் நதி ஆகிடும்…
இதோ இதோ இந்த பயணத்திலே
இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்”
மலைகள் தன்னில்தோன்றுகின்ற
ஒரு நதியாகும்
மண்ணில்
விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் நதி ஆகிடும்…
இதோ இதோ இந்த பயணத்திலே
இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்”
இந்த காலத்தில் இப்படி பட்ட அழகு வரிகளை கேட்பது மிக அரிது.
இந்த அழகு வரிகளையும் ராஜாவின் குரலையும் உள்வாங்கி சில சொட்டு கண்ணீரை வெளியேற்றி எனது பயணத்தை தொடர்ந்தேன். வாழ்க்கை எனும் அந்த பரிசல் எந்த நதியில் பயணிக்கும் என்று அறியாமல்…
இந்த அழகு வரிகளையும் ராஜாவின் குரலையும் உள்வாங்கி சில சொட்டு கண்ணீரை வெளியேற்றி எனது பயணத்தை தொடர்ந்தேன். வாழ்க்கை எனும் அந்த பரிசல் எந்த நதியில் பயணிக்கும் என்று அறியாமல்…
No comments:
Post a Comment