சிறு வயதில் அப்பா எனக்கு ரேடியோ-வில் போட்டு கேட்க வைத்த முதல் பாடல்… நான் மிகுந்த மரியாதையை கொண்டிருக்கும் அந்த கவியரசரின் தேன் ததும்பும் வார்த்தைகள்… சிவாஜி, தேவிகா அவர்களின் நடிப்பு, உணர்ச்சி பொங்கும் கண்கள்… மெல்லிசை மன்னரின் இசை… அதற்க்கு மெருகூட்ட ஒலிக்கும் சௌந்தரராஜன், சுசீலா அவர்களின் பளிங்கு குரல்கள்…
“ஆண்டவன் கட்டளை” என்ற படத்தில் வரும் அழகான வரிகள் பாடல் அது…
“அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்”
“அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்”
அந்த பாடல் படமாக்க பட்ட விதம் என்னை மிகவே கவர்ந்தது… அதிலும் அரசரின் வரிகள்…. கேட்கிறபோது இவ்ளோ தானா வரிகள் என்றாலும், அந்த வரிகளில் பற்பல அர்த்தங்களை காணலாம்…. எப்படி பட்ட சோகத்திலோ துயரத்திலோ இருந்தாலும் என்னை மன நிம்மதிக்கு இழுத்து செல்லும் பாடல் இது… இந்த பாடலை கேட்கும்போது எண்ணற்ற நினைவுகள் அலையடிக்கின்றன… முதல் முதலாக கேட்ட பாடல். மழை காலத்தில் பாடலை கேட்டு காகித கப்பல் செய்து விளையாடுவது, வீட்டில் வாங்கின திட்டல்களும் அடிகளும் என பல நினைவுகள்.
“அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்” என்ற வரிகளின் சுவையே தனி… பல பெரிய விஷயங்களை சர்வ சாதாரணமாய் வரிகளில் பதிக்கும் தன்மை கண்ணதாசனையே சாரும்… அதே நேரம் மெல்லிசை மன்னரின் இசையையும் மறக்க தகாது.
இரவொன்றில் அந்நாள் கவலைகளை மறக்க நான் தேடும் முதல் நண்பன், மருந்து எல்லாமே இந்த பாடலே…. இசையை விட சிறந்த ஒரு மருந்து வேற ஒன்று உண்டா என்ன!!!அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்” என்ற வரிகளின் சுவையே தனி… பல பெரிய விஷயங்களை சர்வ சாதாரணமாய் வரிகளில் பதிக்கும் தன்மை கண்ணதாசனையே சாரும்… அதே நேரம் மெல்லிசை மன்னரின் இசையையும் மறக்க தகாது.
No comments:
Post a Comment