Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Thursday, 29 March 2018

கிறுக்கல்

ஜன்னலோரம் நின்றாயே நீ
அங்கு படிந்த தண்ணீர் துளிகளோ
வெட்கி தலைகுனித்து வீழ்கின்றன
மின்னல் ஒளியில்
உன் அழகை கண்ட நொடியில்……….
————————————————————–
சீற்றத்துடன் காற்றடிக்க
முறிந்து வீழ்ந்தது ஒரு மாமரம்
மழை மறைந்த நேரம்
ஒரு சொட்டு கண்ணீர் விட்டது
சிறு புல் ஒன்று

வியர்வையின் நிறம் சிவப்பு?!!!

தொலைதூரத்தில் ஒரு சாலை விபத்து
கண்டேன் அங்கொரு ரத்த ஆறு
அருகில் சிதைபட்ட ஒரு கை கடிகாரம்
அவர் உயிர்த்துடிப்பை பிரதிபலித்தது அந்த கடிகாரம்
அன்று புரிந்து கொண்டேன்
ரத்தத்தின் நிறம் சிவப்பு…
தூரத்தில் கிழிந்து கிடந்த அவர் சட்டை
சட்டையிலோ கலந்திருந்தது வியர்வை வாசனை
அன்று நான் கண்டு கொண்டேன்
வியர்வையின் நிறம் கூட சிகப்பு தான்?!!!

Wednesday, 28 March 2018

காதல் சுடர்

தனிமை என்னும் இருட்டறை
அதனுள் இதயம் எனும் ஒரு அகல் விளக்கு
தனிமையில் அந்த விளக்கோ வாடுகின்றது!
சிறு  மின்மினி பூச்சியாக நீ வந்தாய்
அகல் விளக்கோ உயிர்பெற்றது!
இருட்டறை பூங்காவனமாக தென்பட்டது!
அந்த அழகிய வனத்தில் என்னுடன் சுற்றி திரிந்தாய்…
சிறகடித்து பறந்தாய்…
கவலைகளை கலைத்தாய்…..
பாசம் எனும் நீரை தெளித்து பூக்கள் மலர செய்தாய்
ஒரு மாலை பொழுது…
விளக்கோ காதல் மயக்கத்தில் சுடர்விட்டது
அதன் காதல் வெப்பத்தில் எரிந்தாள்…
அவள் திரும்பி எழவே இல்லை  
மீண்டும்………
தனிமை என்னும் இருட்டறை
அதனுள் இதயம் எனும் ஒரு அகல் விளக்கு
தனிமையில் அந்த விளக்கோ சுடர் விட்டு எரிகின்றது!!!
இன்னும்  தனது தொலைந்த காதலியை தேடி……

அதிர்ஷ்ட்டசாலி

நான் அதிர்ஷ்ட்டசாலி!!!
கண்டதும் காதல்
முதல் வார்த்தை… முதல் முத்தம்…..
இரண்டும் கொடுத்தது அவள்
அவள் சொன்ன முதல் வார்த்தை…
“நீ என் செல்லம்”
என்னை இடுப்பில் வைத்து நிலாச்சோறு ஊட்டியபொழுது 
கொடுத்த முதல் முத்தம்…
நான் பூமியில் பிறந்த அடுத்த நொடி
நான் அதிர்ஷ்ட்டசாலி!!!
பிறந்த அன்றே பிறவி பலனை அடைந்து விட்டேன்….

Friday, 12 October 2012

உனக்கே சமர்ப்பணம்...



நிலவொளியில் சந்தித்தபோது சிந்தித்தேன்
உன்னை பார்த்து
அந்த நிலவே சிந்திய தேனா இவள் என்று

======================================
உனக்காக இரவில் மூட மறுக்கும் கண்கள்
உன்னை நினைத்தே மூடி கிடக்கின்றன பகலில்

======================================
"எல்லாம் முடிந்து விட்டது நமக்குள்"
சொல்லி துடித்தது உன் இதயம்
சொல்ல மறுக்கின்ற உன் கண்கள்
யாரை தான் நான் நம்புவது

======================================
“கண்களையும் இதயத்தையும் விட உண்மையை நம்பு” என்றாய்
அந்த உண்மையை முடிவு செய்ததே
அதே கண்களும் இதயமும் தானே
======================================
அலையும் காற்றும் காதல் பழகும் கடற்கரையில்
தனக்கும் காதல் வருமென்று ஏங்குகின்றது
அலைகளில் தத்தளிக்கும் அந்த ஒற்றை படகு...!!!