நிலவொளியில் சந்தித்தபோது சிந்தித்தேன்
உன்னை பார்த்து
அந்த நிலவே சிந்திய தேனா இவள் என்று
======================================
உனக்காக இரவில் மூட மறுக்கும் கண்கள்
உன்னை நினைத்தே மூடி கிடக்கின்றன பகலில்
======================================
"எல்லாம் முடிந்து விட்டது நமக்குள்"
சொல்லி துடித்தது உன் இதயம்
சொல்ல மறுக்கின்ற உன் கண்கள்
யாரை தான் நான் நம்புவது
======================================
“கண்களையும் இதயத்தையும் விட உண்மையை நம்பு” என்றாய்
அந்த உண்மையை முடிவு செய்ததே
அதே கண்களும் இதயமும் தானே
======================================
அலையும் காற்றும் காதல் பழகும் கடற்கரையில்
தனக்கும் காதல் வருமென்று ஏங்குகின்றது
அலைகளில் தத்தளிக்கும் அந்த ஒற்றை படகு...!!!
No comments:
Post a Comment