Thursday, 29 March 2018

என் வாழ்க்கை பாதையில் சுவைத்த பாடல்கள் – 1

நான் தான் நிறைய பாடல்களை கேட்கிறேனே, பிடித்த பாடல்களை பற்றின ஒரு தொகுப்பு எழுதினால் என்னவென்று ஒரு யோசனை. எனக்கு பிடித்த பாடல்கள் பற்றியும், எனது கருத்துக்களை பற்றியும் இங்கு சொல்லியிருக்கிறேன்
எனது முதன்மை தோழர்களில் சிறந்தவன் என்றால் அதை எனது தனிமை தான் என்று சொல்லுவேன். தனிமை விரும்பியாகவே இருந்து விட்ட எனக்கு பாடல்கள் என்பவர்கள் பெரிதும் கவர்ந்த நண்பர்கள் ஆயினர். அதிலும் கவியரசரின் வரிகள் மற்றும் இசை ஞானியின் இசையுண்டு மலர்ந்த பாடல்கள் என்னை நான் என்ற மனிதன் ஆக்கியது.
என் சந்தோஷங்கள், கவலைகள், வலிகள், துன்பங்கள், கனவுகள் என்று எல்லாத்திலும் பங்கு கொண்ட பாடல்கள் மற்றும் இசை ஞானிக்கும் கவியரசருக்கும் இந்த தொகுப்பு சமர்ப்பணம்….
அப்படி தனிமையை தழுவும் தருணங்களில் ஒரு மனிதன் ஆட்கொள்ளும் எண்ணங்களும் சிந்தனைகளும் பலஅப்படி பட்ட பொழுதுகளில் நான் என்ன மன நிலையில் இருந்தாலும், எனது மனம் என்று குரங்கிற்கு நிம்மதியும் அமைதியும் தருவது இந்த பாடல்கள் தான்.. பல பொழுதும் நான் யோசித்திருக்கிறேன் அப்படி என்னை தான் அதில் தந்திரம் இருக்கின்றது என்றுஎன்னவென்று விடை இன்னும் காணவில்லைஎன்றாலும் மனம் எவ்வளவு குழப்பத்தில் கலங்கி கிடந்தாலும் ஒரு சொட்டு அமைதியை தந்து சந்தோஷத்தை தூண்டும் ஒன்று அது
அடுத்த தொகுப்பில் பேசுகிறேன் என் வாழ்கையில் என்னுடன் பிரயாணம் செய்யும் அந்த நண்பர்களை பற்றி.

No comments:

Post a Comment