'காடு' என்ற ஒரு பெரிய புதினத்தை வாசித்த பிறகு ஒரு மாற்றம் தேவை பட்டது. ஒரு சிறு வேகமான வாசிப்பு. எப்போதும் ஒரு நீண்ட வாசிப்பின் பிறகு நான் நாடுவது சுஜாதாவைத்தான். அந்த மட்டில் வாசிக்க நேர்ந்தது ஆர்யபட்டா. இது ஒரு கன்னட மொழி படமாக்க பட்டது என்று தெரிந்த பிறகு அதை வாசித்ததுடன் அந்த திரைப்படத்தையும் பார்க்க நேர்ந்தேன்.
பெங்களூரில் வசித்து வருகிறார்கள் ஆனந்த் பாரதி தம்பதிகள். பாரதி ஊருக்கு சென்றிருந்த நிலையில் விஞ்ஞானி ஆனந்த் தனது இல்லத்தில் சுட்டு கொலை செய்யப் படுகிறார். மரணத்தின் முன் அவர் காவல் துறை எண்ணில் அழைத்து சொன்ன ஒரே வார்த்தை 'சோமு'. பிரபாகர் ராவ் விசாரணை ஆரம்பிக்க பல கேள்விகள் எழுகின்றன. அந்நியநாட்டு சதிகாரர்களால் கொலை செய்யப்பட்டுவிட்டாரோ அல்லது பகைமை காரணமான கொலையோ என்று பல கேள்விகள். சோமு என்ற பெயருக்கு சற்று ஒத்துப்போகும் ஆனந்தின் இரண்டு சகா பணியாளர்கள் மீது சந்தேகம் படர்கிறது. இருந்தும் விசாரணை எங்கும் முன்னேறாத நிலையில் ஆளும் கட்சியின் மந்திரிசபையே உலுக்குகிறது. விசாரணை சிபிஐ க்கு மாற்ற பட இந்த கொலையின் மர்மம் வெளிச்சத்திற்கு வருகிறதா என்பதே மீதி கதை.
மிகவும் சிறு வாசிப்பு இது. இரண்டு மணி நேரத்திற்குள் நான் வாசித்து முடித்த புத்தகம் இது. ஒரு திரைப்படத்திற்க்கே உரிய பரபரப்புடன் நன்றாகவே கதை ஆரம்பிக்கின்றது. மர்மத்தை ஆரம்பத்திலே நன்றாக கொண்டு போனாலும் பாதி கதைக்கு மேல் சற்று தொய்வு அடைந்த நிலை. சுஜாதாவின் மற்று புத்தகங்களில் இருந்து சற்று பின்தங்கி நிற்கும் நிலை. ஆரம்பத்தில் இருந்த பரபரப்பு முடிகையில் தணிந்த நிலையில். கதாபாத்திரங்கள் சிலரே. போதுமானதாக இருந்தாலும் சில பாத்திரங்கள் சற்று பலவீனமாக காணப்பட்டது. மந்திரிசபை விழ கூடாது என்பதற்க்காக சிபிஐ கொண்டு வந்து விரைவாகவே முடித்து போல் இருந்தது கடைசியில் முடித்த விதம். சற்று வித்தியாசமாக இருந்தாலும் முடிவு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை.
ஒரு கன்னட படத்துக்காக நடிகர் ரமேஷ் அரவிந்த் சொன்ன ஒரு சிறு விஷயத்தில் இருந்து உடல் எடுத்து புதினம் இது. அந்த திரைப்படத்தையும் பார்க்க நேர்ந்தேன். திரைக்கதை சற்று மாறுபட்டது புதினத்தில் இருந்து. படத்துக்கே உண்டான பாணியில். படமும் சுமாராக இருந்தது. வழக்கமான சுஜாதா மர்ம நாவல்களில் இருந்து சற்று தொய்வு நிலையில் இருந்தாலும் ரயில் மற்றும் பேருந்து பயணத்திற்க்கேற்ற ஒரு சிறு புதினம் இது.
No comments:
Post a Comment