தமிழையும் தமிழ்நாட்டைப் பற்றியும் - அதன் கலாச்சாரங்கள், பண்பாடுகள் பற்றி வாசிக்க மிகவும் ஆர்வம் கொண்ட நான் அதிகமாகக் கேள்விப்பட்ட ஒரு பெயர் - தொ. பரமசிவம். என்னுடைய முதல் தொ.ப. புத்தகம் இது.
தமிழகத்தைப் பற்றிய பல அறியப்படாத சுவாரஸ்யமான, அறிய விஷயங்களை இந்த புத்தகத்தால் சொல்லப் படுகிறது. தமிழ் மொழியில் துவங்கி பண்டைய தமிழர்களின் வீடு, வாழ்வு, உடை, உறவுமுறைகள், பண்டிகைகள், விளையாட்டுகள், மாதங்கள், வட்டார வழக்கு, நிறம் என்கிற விஷயங்களைப் பற்றிப் பல கட்டுரைகளாக இந்த புத்தகம் பேசுகிறது.
நம் பண்பாடு மற்றும் வாழ்வியல் அந்நிய அரசர்களால் எப்படி மாற்றம் அடைகிறது என்று இந்த புத்தகத்தில் உணர்த்துகிறார். வாசிப்பு மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது. எளிதில் வாசிக்க வாய்க்கு எழுத்து நடை. சரளமான எழுத்துக்களால் நம்மை ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்துக்கு ஏற்படுத்துகிறார். பண்டைய தமிழ்ச் சமூகம் எப்படி ஜாதி மற்றும் மதம் கொண்டு வரும் தாக்கம் மற்றும் அதன் விளைவுகளில் சிக்கி மாறுதல் அடைந்தது என்று சுருக்கமாகவும் அழுத்தமாகவும் சொல்லியுள்ளார். விளையாட்டு மற்றும் உறவுமுறைகள் பெயர்கள் என்ற பகுதிகள் எனக்குச் சற்று வித்தியாசமாகப் பட்டது. ஏன் என்றால் வேறு எங்கும் இதைப் பற்றி வாசித்தது இல்லை.
நம் தமிழ் வாழ்வியலைப் பற்றி அறிய விரும்பும் எல்லோராலும் வாசிக்கவேண்டிய ஒரு புத்தகமே இது. வாழ்வியல் மற்றும் சமூகவியல் எச்சங்கள் மற்றும் அது அடைந்த மாற்றங்கள் பற்றிய அழகான கட்டுரைகள் கண்டிப்பாக வாசிக்கப் படவேண்டியதே.
No comments:
Post a Comment