சிறு கதைகள் படித்து பல நாட்கள் ஆகிவிட்டது என்ற நினைப்பு இந்த புத்தகம் வாசிக்க தூண்டியது. ஜெயமோகன் சிறு கதைகளுக்கென்று ஒரு தனி அழகு உண்டு. அதை எதிர்பார்த்து தான் இந்த புத்தகத்தை எடுத்தேன்.
ஒரு வீட்டில் திருட்டு நடந்தது. திருடியவனை காட்டிக்கொடுக்காத பெரியவர், கொலை செய்தபின்னும் எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாத ஒரு சிறு பையன், வாழ்க்கைக்கு வழிகாட்ட வந்தவரின் தற்கொலை, சிறைச்சாலையில் நிறைவேற்றப்படும் தூக்குதண்டனை என்று குற்றங்களை சார்ந்த பத்து கதைகள் அடங்கியது இந்த புத்தகம்.
ஜெயமோகன் அவர்களின் சிறுகதைகளுக்கென்றே ஒரு தனி பாணி இருக்கிறது. இந்த சிறுகதை தொகுப்பும் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல.குற்றம் என்ற விஷயத்தை சார்ந்து எழுதப்பட்டாலும் அதிலும் பல உணர்ச்சிகளை கொண்டு வந்திருக்கிறார். கதைகள் எனது மாவட்டத்தில் அமைந்ததால் அந்த வட்டார வழக்கும் பழக்கங்களும் இன்னும் என்னை இந்த கதைகளை ரசிக்க செய்தது. பற்பல காலகட்டத்தில் நடந்த கதைகள் என்றாலும் அவரின் எழுத்துக்கள் வாயிலாக நம்மை அந்த நேரத்துக்கே கொண்டு செல்கிறார். வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முதல் பகுதி கூட இதில் வரும் ஒரு கதையே.
நெறியில் இருந்து விளக்குவதே குற்றத்தின் அடிப்படை ஆகும். அப்படிபட்ட குற்றங்களின் பின்புலங்களை கதைமாந்தர்களின் மனநிலையும் மய்யமாக வைத்து எழுதப்பட்ட இந்த கதைகள் கண்டிப்பாக படிக்கப்படவேண்டியவை.
No comments:
Post a Comment