Thursday, 29 March 2018

விட்டு விடு கருப்பா - இந்திரா சௌந்தரராஜன் - புத்தக விமர்சனம்


சிறுவயதில் சன் டிவி யில் ஒலிபரப்பகியிருந்த ஒரு தொடர் மர்ம தேசம். அன்றிலிருந்தே அதனுடைய புத்தகத்தை தேடிகிட்டு இருந்தேன். போன வாரம் தான் இந்திரா சௌந்டரரஜனோடவிட்டு விடு கருப்பாகிடைத்தது. திருமகள் நிலையம் பதிப்பகத்தில் இருந்து வாங்கினேன். மூன்று நாட்களில் படித்து முடித்தேன்.
அன்று தொடரில் பார்த்த வெள்ளை குதிரை மட்டும் தான் ஞாபகம் இருந்தது. அதனால், என்னால் அந்த புத்தகத்தை முதல் தடவை போல ரசிக்க முடிந்தது. ஒரு கிராமமும் அதில் வாழும் மனிதர்களும், அவர்களை ஆட்டி வைக்கும் நம்பிக்கைகளையும் மிக அருமையாக எழுத்தில் கொண்டு வந்திருப்பார் எழுத்தாளர். அது தான் இந்த கதையின் கருவும்.
ஒரு கிராமமே கருப்பு சாமியின் மேல் இருக்கிற பக்தியிலும் பயத்திலும் கட்டுண்டு கிடக்கிறது. அந்த கிராமத்தாருக்கு கருப்ப சாமியின் மேல் இருக்கிற நம்பிக்கையை பயன்படுத்தி கொள்ளையர்கள் ஊரையே கொள்ளையடிக்கிரர்கள். அதே போல் கதாநாயகியின் குடும்பத்தில் நடந்த மற்றும் நடக்கும் சம்பவங்கள்…. கொடுமைக்கார பாட்டியின் செயல்கள்அதனால் அவர்கள் மேல் கருப்ப சாமிக்கு வந்த கோபம்…… இதைமூட நம்பிக்கைகருப்ப சாமீ பெயரை சொல்லி யாரோ அவர்களை விளையாட்டு கட்டுகிறார்கள்என உண்மையை கண்டறிய துடிக்கும் கதாநாயகியின் தோழிஅவளை காதலிக்கும் சக டாக்டர்கருப்புக்கு பயப்படாத அனால் கொஞ்சம் பயப்படுகிற அவள் அண்ணன். என கண கட்சிதமாய் உயிர் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர்.
வெள்ளை குதிரை மேல் கருப்ப சாமி வலம் வருவதும், அது போல மாளிகையில் பாட்டியின் பேய்யை பார்ப்பதும் என மிக அருமையாக திகிலூட்டுகிறார் இந்திரா. அவர் இந்த புத்தகத்தின் மூலமாக அவநம்பிக்கைகைளை ஒரு பக்கம் ஏளனம் செய்திருந்தாலும், மறுபக்கம் கடவுள் நம்பிக்கையை நிலை நாட்டியிருக்கிறார். இந்த கதையினுடைய கிளைமாக்ஸ் அதுக்கு மிக நல்ல ஒரு எடுத்துக்காட்டு. அதேபோல் ஒரு கிராமத்தின் பசுமையையும் அதன் உயிராக்கத்தையும் மிக அருமையாக நம் கண் முன்னால் கொண்டு வருகிறார் இந்திரா.
மொத்தத்தில் நம்பிக்கை-அவநம்பிக்கை என்கின்ற இரு துருவங்களை ஒன்றாக கொண்டு வந்து நம்மை யோசிக்கவும் ரசிக்கவும் வைத்திருக்கிறார் இந்திரா சௌந்தரராஜன்.

No comments:

Post a Comment