Thursday, 29 March 2018

தலைகீழ் விகிதங்கள் – புத்தக விமர்சனம்


எனது சொந்த ஊர் நாகர்கோயில் பக்கம். பிழைப்புக்காக வேறு ஊர் வந்து சில வருடங்கள் கடந்த பிற்பாடும் நினைவில் பச்சை குத்தபட்டே இருக்கிறது அந்த இடம். அதனாலே தான் நாஞ்சில் நாடன், ஜெயமோகன், சு.ரா, நீல பத்மநாபன் அவர்களின் புத்தகங்களை அதிகம் விரும்பி படிப்பேன். புத்தகத்திலாவது அந்த ஊரில் வாழலாம் அல்லவா!!! சமீபமாக நான் படித்த புத்தகம் “தலைகீழ் விகிதங்கள்”. நாஞ்சில் நாடன் முதல் நாவல் படைப்பு.

கதை சுருக்கம் என்று சொல்ல போனால் ஒரு பட்டதாரி இளைஞனின் கதை. வேலை தேடிகொண்டிருக்கும் இளைஞன். அவ்விளைஞனை ஒரு பெரிய வீட்டு பெண்ணுக்கு மனம் முடிச்சு வெக்க அவன் வாழ்கையில் வரும் மாற்றங்கள். தன் வீட்டு வசதிகளில் வாழவே மனைவி ஆசைப்படுகிறாள். வீட்டு மாப்பிளையாக இருக்க முடியாமல் வேலை தேடுகிறான். மாமனார் மாமியார் ஏசல்கள் தாங்கமுடியாமல் வீடை விட்டு வெளியேறுகிறான். அவனுக்கு வேலை கிடைக்குதா, மனைவி அவனுடன் ஒன்றி செல்கிறாளா என்பது தான் கதை.

என்னை மிகவும் கவர்ந்தது நாஞ்சில் நாடனின் கதை களம். நாஞ்சில் நாட்டு வாழ்கையும் வட்டாரமும் நடத்தைகளையும் மனதில் கொண்டு எழுதியுள்ளார். நான் வளர்ந்த ஊரும் பழகிய மக்களையும் தத்ரூபமாக கண் முன்னால் நிறுத்தியிருக்கிறார். அதனாலேயே அதில் ஒரு மாய பாத்திரமாக உள்ள்சென்று என்னால் புத்தகத்தில் வரும் நிகழ்வுகளை காண முடிந்தது. படித்து வேலையில்லாத இளைஞனின் மன நெருடலை அழகாக சித்திரித்திருக்கிறார். அவனுள் இருக்கும் கோபம், வருத்தம், குமுறல், காமம், சந்தோசம் என எல்லா ரசங்களையும் காகிதத்தில் படைத்திருக்கிறார். குத்தி பேசும் மாமியார், சிறு வயதாயினும் அறிவுடன் செயல்படும் நாத்தனார், அவனுக்காக பரிதாப படும் நண்பன், அவன் உள்குமுறல் புரிந்தும் கோவத்திற்கு பயப்பட்டு பேச முடியாமல் துடிக்கும் அம்மா என நல்ல பத்திரங்கள் பல.

தங்கர் பச்சான் இந்த புத்தகத்தை “சொல்ல மறந்த கதை” என்ற பெயரில் திரைக்கு கொண்டு வந்தார். அந்த படத்தை பார்த்தது இல்லை. அதனால் நாவலுக்கு எந்த அளவுக்கு நீதி அளித்திருக்கிறார் என்று தெரியவில்லை.
Ego என்ற சொல்லால் Cliche உணர்வு கொடுத்தாலும் கதை நகரும் வழியும் ஒரு ஒரு ஊரின் வாழ்கையை த்ரூபமாக கொண்டு வந்த விதமும் எழுத்தாளர் திறனும் பாராட்டத்தக்கது.

Book-O-Meter:

No comments:

Post a Comment