Saturday, 27 April 2019

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - பெருமாள் முருகன் - புத்தக விமர்சனம்



'மாதொருபாகன்'- சில வருடங்களுக்கு முன் பெரும் சர்ச்சைக்கு ஆட்கொள்ளப்பட்ட ஒரு புத்தகம்மதத்தையும் நம்பிக்கையையும்பெண்மையையும் தப்பாக சித்தரிக்கும் ஒரு புத்தகம் என்று பேச்சு வந்ததுபெருமாள் முருகன் என்ற எழுத்தாளரை அறிந்தது அப்போதே. "பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் மாண்டு விட்டார்இப்போது இருப்பது முருகன் என்ற வாத்தியார் மட்டுமேஎன்று சர்ச்சையின்போது அவர் சொன்னார்எனக்கும் அந்த புத்தகம் படிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததுகற்பனையும் நடைமுறையும் சேர்ந்த அந்த படைப்புஎனக்கு பிடித்திருந்தது கூட. 'ஆலவாயன்', 'அர்த்தநாரி'-க்கு பிறகு சமீபத்தில் அவர் படைப்பில் எனக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது"பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை".

மனிதர்களை பற்றியும் கடவுள்களை பற்றியும் எழுதினால் தானே பிரச்சனைஅப்பாவி ஆட்டை பற்றி எழுதுவது தான் நல்லது என்ற ஒரு முன்னுரையோடு இக்கதையை ஆரம்பிக்கிறார்ஆடுகளை மேய்ப்பதற்கு சென்ற கிழவனுக்கு ஒரு மர்மமான நபரிடம் இருந்துவெள்ளாட்டு குட்டி ஒன்று கிடைக்கின்றதுஏழு குட்டிகள் வரை ஈன்றெடுக்கும் தன்மை கொண்ட விசேஷமான ஆடு என்று அம்மனிதர் கூறுகிறார்மற்ற ஆடுகளை போன்று அல்லாது மிகவும் சின்னதாக இருந்ததுஅதை கிழவியிடம் ஒப்படைக்கஅவள் அதை தன் குழந்தைப்போல் வளர்க்கிறாள்பூனாச்சி என்று பெயர் சூட்டுகிறாள் அந்த கறுப்பழகிக்குஅதை ஒரு அதிசயமாக பார்க்கும் கிழவியும் மாற்றுசனங்களும்மற்ற ஆடுகளின் நடுவில் அது ஒரு புத்துயிர்அதற்க்கு பால் கொடுக்க மறுக்கும் மற்று ஆடுகள்அதற்க்கு பின் அது எப்படிதன உயிரை தக்க வைத்து வாழ்கிறது என்றும்இந்த உலகத்தை அதன் பார்வையில் எப்படி காண்கிறது என்றும்அதற்குள் தோன்றும்காதல்காமம்பாசம்தாய்மைநட்புபிரிவு என்னும் உணர்வுகளை பற்றியும் சொல்வதே இந்த புத்தகம்.

இந்த கதையின் மிக பெரிய பலம் அதை கையாளப்பட்ட விதம் தான்.  ஒரு ஆட்டின் மனைநிலையை இப்படி கூட அழகாக சித்தரிக்கமுடியுமா என்று யோசிக்க தோன்றும்ஒரு கட்டத்திற்கு பிறகு நாமும் அதன் நினைவலைகளில் வாழ ஆரம்பிக்கிறோம்மற்றொரு மிகப்பெரிய பலம் ஆட்டின் நினைவலைகளில் வரும் வசனங்கள்மிகவும் சிந்திக்க வைக்கும் வரிகள் அதிகமாக உண்டுபூனாச்சிக்குதோன்றும் காதலை விவரித்த விதம் என்னை மிகவும் கவர்ந்ததுகாலப்போக்கில் மனிதனின் மனம் எப்படி மாறுகிறது என்று அழகாக சொல்லப்பட்டிருக்கிறதுஅவள் மேல் பாசம் வைத்திருந்தாலும் இக்கட்டான சூழ்நிலையில் கிழவி ஏன் அவளை அதட்டுகிறாள் என்று புரியவில்லை பூனாச்சிக்குஎங்கள் உயிர் பால் சுரத்தவும்குட்டிகளை ஈன்றெடுக்கவும் மற்றும் கடவுளுக்கு பலி கொடுக்கவும் தானா என்று பூனாச்சி யோசிக்கிறாள்நம்மையும் யோசிக்க வைக்கிறாள்இதற்கெல்லாம் மேல் எழுத்தாளர் அரசு இயந்திரத்தை கேலி செய்கிறார்கூட.   மிகவும் அழகாகநாசூக்காககிராமமும் அங்குள்ள வாழ்க்கையும் நம் முன் அழகாக வரைந்திருக்கிறார்பஞ்சம் ஏற்பட்டுகஷ்டப்படும் நிலையை இக்கதையில் ஆழமாக சொல்ல பட்டிருக்கிறதுஅதன் தாக்கம் நாமும் உணருகின்றோம்.

கற்பனை கதையில் யதார்த்தத்தை சொல்லி நம்மையும் யோசிக்க வைக்கிறது இந்த பூனாச்சிமென்மையாக வாசித்துவிடலாம் என்று தோன்றும் இப்புத்தகம் நம்மை மிகவும் சிந்திக்க வைக்கிறதுகாலத்திற்கும் தருணத்திற்கும் ஏற்று மனித எண்ணங்களும் குணங்களும் எப்படி மாறுகின்றன என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டுஅதுவும் ஒரு விலங்கின் பார்வையில்இது வரைக்கும் நான் வசித்த புத்தகங்களில்  எந்தெந்த நூல்கள் மிகவும் பிடித்தது என்று கேட்டால் அதில் நிச்சயம் இன்று முதல் பூனாச்சியும் இருப்பாள்இக்கதையோடு பெருமாள் முருகன் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவராக கூட மனதில் நிற்கிறார்தன்னலம் விரும்பும் மனிதர்கள் மட்டும் நிறைந்தது அல்ல இந்த உலகம்ஐந்து அறிவு ஜீவன்கள் என்று நாம்  கருதும் ஜீவராசிகள் கூட இவ்வுலகத்தின் ஒரு பாகமேசற்று யோசித்து பாருங்கள்அவர்களால் பேச முடிந்தால் என்னென்ன சொல்லியிருக்குமென்று?!

Book-o-Meter

4 comments:

  1. கதையின் பெயர் போலவே கதையும் வித்தியாசமாக இருக்கிறது.விமர்சனம் அருமை.

    ReplyDelete
  2. விமர்சனம் மிக அருமை. ஒரு ஆட்டுக்குட்டியின் பார்வையில் கதை எழுதுவது அவ்வளவு சுலபம் அல்ல. இது மாதிரி நல்ல கதைகள் நிறைய வரவேண்டும். நானும் இக்கதையை படிக்க ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. kandippaga padinga. You wont be disappointed.

      Delete