Thursday 18 April 2019

உலராத ரத்தம் - ராஜேஷ் குமார் - புத்தக விமர்சனம்

அதிகமான மக்கள் படிக்க விரும்பும் வகை திகில் மற்றும் திரில்லர் புத்தகங்கள். தமிழில் இந்த வகை சார்ந்த எழுத்தாளர்கள் சுஜாதா, இந்திரா சௌந்தரராஜன், சுபா, ராஜேஷ் குமார். அதிலும் ராஜேஷ் குமார் மற்றவராகளை விட மிக அதிகமாக இந்த வகைரா கதைகள் எழுதியவர். இதில் சிலது திரைப்படங்கள் ஆகியிருக்கிறது. சென்ற வருடம் வந்த 'குற்றம் 23' கூட இவர் கதையை அடிப்படையாக கொண்டது தான்.

ருத்ரமூர்த்தி  நகரத்தை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரன். முதல் மனைவியை இழந்த இவருக்கு சுகிர்தா என்ற இளம் இரண்டாம் மனைவி, இரண்டு மகன்கள் அவர்களது மனைவிகள் என்ற குடும்பம். அவர் நகரத்தை விட்டு வெளியில் ஒரு பழைய ஜாமீன் வீடு வாங்குகிறார். ஊர் மக்கள் அங்கு கெட்ட சக்திகள் உலவுவதாக சொல்கின்றன. அவர்களும் அங்கு சென்ற முதல்  ஏதேதோ தடங்கல்கள். ஒரு பெண் உருவத்தை காண்கிறார்கள். தொடர்ந்து மரணங்கள் நிகழ்கின்றன. போலீஸ், மந்திரவாதிகள் யாவராலும் இதற்கு ஒரு முடிவு கொண்டு வர முடியவில்லை. இந்த மர்மத்தின் முடிச்சை அவிழ்ப்பதே உலராத ரத்தம்.

கதை திகிலா இல்லை வேறு ஏதாவது மர்மமா என்று தெரியாத அளவிற்கு நகர்கின்றது. ஒரு அமானுஷ்ய நிகழ்வு நடந்த பிறகு அதை நாம் பகுத்தறிவால் சந்தேகப்படும் தருணம் இன்னொன்று நிகழ்கிறது. வாசகனை எப்போதும் ஒரு சந்தேகத்தின் விளும்பில் நிறுத்த எழுத்தாளரால் முடிகிறது. இது போன்ற மர்ம கதைகள் அதிகமாக படிப்பதனாலோ என்னவோ என்னால் இந்த மர்மத்தின் முடிச்சை ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. அது என் ஸ்வாரஸ்யத்தை சற்று குறைத்து. என்றிருந்தாலும் வேகமாக நகரும் கதை களம் அதன் வேலையே செய்தது. ராஜேஷ் குமார் கதைகளில் வரும் விவேக் ஒரு முழு பாத்திரமாக இல்லாமல் கடைசியில் இதை விசாரிக்கவே வருகிறார். மற்ற படி  ருத்ரமூர்த்தி,சுகிர்தா மற்றும் போலீஸ் பாத்திரங்களே கதையில் அடிக்கடி வந்து போகிறவர்கள்.

அமானுஷ்யம், மர்மம், துப்புரவு என்பது எழுத்தாளர்களுக்கு ஒரு நல்ல கதைக்களத்தை கொடுக்கும். ஆனால் அதை சரியாக கையாள்வது கடினம். இந்த  கதையில் டென்ஷன்-ஐ நன்றாக நிலைநாட்டிய ராஜேஷ் குமார் பாத்திரங்களுக்கும் கொஞ்சம் ஆழத்தை கொடுத்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. இருந்தும் கண்டிப்பாக் ஒரு வாட்டி படிக்க தகுந்தது ஒரு திரில்லர் இந்த 'உலராத ரத்தம்'.

Book-o-Meter

4 comments:

  1. Semma...keep up the good work ma

    ReplyDelete
  2. The Review is good. As you rightly said the writer keeps us at the edge of the seat throwing thrills often. Explaining more about the characters could have reduced the interest of the reader. May be that's why he has avoided it.

    ReplyDelete
    Replies
    1. or may be the story is intended to be a real small one. It was hardly 120 pages na

      Delete