குற்ற பின்னணியில் உள்ள கதைகளுக்கு என்றும் மவுசு உண்டு. தமிழில் சுஜாதா இந்த ரகத்தை சார்ந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர். அதிலும் கணேஷ்-வசந்த் என்று அவர் உருவாக்கிய வக்கீல் கதாபாத்திரம் மிகவும் பிரபலம்.
கணேஷ் - வசந்திற்க்கு சிவப்பிரகாசம் என்ற ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது. அதில் அவர் உயிருக்கு ஆபத்து சீக்கிரம் வரவும் என்று சொல்கிறார். ஆனால் அவர்கள் செல்வதற்குள் அந்த கொலை நிகழ்கிறது. அவர் சொந்தக்காரர் ஒருவரான அருணாச்சலம் அகப்படுகிறான். இருந்தும் தான் நிரபராதி என்று சாதிக்கிறான். உண்மையான குற்றவாளி யார்? அருணாச்சலத்திற்கு இந்த கொலையில் என்ன பங்கு உள்ளது? இதெல்லாம் கண்டு பிடிப்பதே 'மீண்டும் ஒரு கொலை'.
வேகமாக நகரும் கதைக்களம் இந்த 'மீண்டும் ஒரு குற்றம்'. கணேஷ் வசந்த் என்ற இரண்டு பேரும் எப்பொழுதும் போல் இதில் தனது துப்பறியும் திறமைகளை வெளிக்காட்டுகிறார்கள். வசந்த் தனது ரெட்டை அர்த்த வசனத்தை தொடர்கிறான். இது போன்ற கதைகள் அதிகமாக படித்ததாலோ என்னமோ சலிப்பாகவே இருந்தது. பாதி புத்தகம் ஆனபோதே யார் குற்றவாளி என்று நம்மால் யூகிக்க முடிகிறது. அது தெரிந்ததனாலோ என்னவோ இந்த கதை கொஞ்சம் சீக்கிரமாகவே முடித்துக்கொள்கிறார் எழுத்தாளர். அவருக்கே உரிய
நகைச்சுவை நடை எப்பொழுதும் போல் இதிலும் உள்ளது.
வழக்கமான சுஜாதா புத்தகத்தின் விறுவிறுப்பு கொஞ்சம் கம்மியாக இருந்தாலும் ஒரு இரண்டு மணி நேர வாசிப்பில் முடிக்க முடிந்த ஒரு சிறு புத்தகம் இந்த 'மீண்டும் ஒரு குற்றம்'.
Book-o-Meter

திகில் வகை கதைகள்ள சுவாரசியம் கொரஞ்சாலே படிக்க தோணாது. அடுத்த தடவ நல்ல திகில் கதையா Goodreads ல விமர்சனம் பாத்துட்டு படிங்க. இந்த விமர்சனம் பாத்துட்டு நான் தெரிஞ்சுண்ட மாதிரி :)
ReplyDelete:D
Delete