Tuesday, 15 December 2020

எஸ்தர் (சிறுகதை) - வண்ணநிலவன் - சிறு விமர்சனம்

                   சில வாரங்கள் முன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் பரிந்துரைத்த சிறுகதை இது. மிகவும் அருமையான ஒரு சிறுகதை. வெறும் இருபது பக்கங்கள் கொண்டிருந்தாலும் அவ்வளவு வேகமாக முடித்து செல்ல முடியவில்லை.மனிதர்களின் இயலாமையை நேர்த்தியாக வெளிக்காட்டுகிறது. நொறுங்கிகொண்டு இருக்கும் குடும்பத்தை தாங்கி நிற்கும்  நெடுந்தூண் தான் எஸ்தர். எஸ்தர் என்ற பெண்மணியின் வலிமையை உணர்த்துகிறார் எழுத்தாளர். பாட்டி, எஸ்தர் சித்தி மற்றும் குழந்தைகள் என மூன்று தலைமுறைகளின் விம்மல்களை இத்தனை பக்கங்களினுள் அடக்கியது அறுபுதம். முதல் ஐந்து பக்கங்கள் வேகமாக சென்றன. பிறகு மனதிற்குள் ஏதோ ஒரு பாரம். வாசிப்பு  மெல்லவே சென்றது. நீர் இல்லாத ஒரு நிலத்தை பற்றி வாசிக்கையில் என்னவென்று தெரியாத ஒரு படபடப்பு. இவ்வுலகில் மனிதர்கள் எவ்வளவு சின்ன புள்ளிகள் என்று உணர்த்துகிறார் வண்ணநிலவன். அனைவராலும் கண்டிப்பாக வாசிக்கப்படவேண்டிய ஒரு சிறுகதை இந்த 'எஸ்தர்'.

No comments:

Post a Comment