Kindle மின் புத்தகமாக வெளியான ஒரு சிறு கதை.
அதியமான் என்ற ஒரு தாத்தா தன் மனைவி மைதிலியுடன் பூங்காவிற்கு ஒரு மர்மத்தை கண்டு பிடிக்க போவதே இந்த கதையின் ரத்தின சுருக்கம். அதியமான், மைதிலி இரண்டு பேர் தான் முக்கிய பாத்திரங்கள். இருபது பக்கங்களில் முடியும் இந்த கதை மிகவும் சீக்கிரமாக வாசிக்க முடிந்தது. எளிமையான எழுத்தும் நடையும். அதியமான் மற்றும் மைதிலியின் இடையே உள்ள அன்யோன்யம் மற்றும் அவர்கள் இடையே நடக்கும் சம்பாஷனை அருமை. நகைச்சுவை மேலோட்டமாக தெளிக்க பட்டுள்ளது. இந்த ஒரு சில பக்கங்களில் காதல், அன்பு, நகைச்சுவை, மர்மம் என்று பல கோணங்கள் கொண்டு வந்துள்ளார் எழுத்தாளர். அது பாராட்ட தக்கது. அதியமானின் மகன், மருமகள், பேரன் மற்றும் அவன் தோழி என்பவர்கள் மற்று பாத்திரங்கள். இத்தனை குறுகிய பக்கங்களினுள் அவர்களுக்கும் ஒரு சின்ன இடம் ஒதுக்கி அவர்களுக்கான ஒரு அமைப்பை எழுத்தாளர் வரைகிறார். கதையின் ஓட்டத்தை எந்த விதத்திலும் களைக்காமல். அந்த குட்டி பெண் ரம்யா இந்த கதையில் என்ன பங்கு ஆற்றுகிறார் என்று எனக்கு சரியாக விளங்கவில்லை. தேவை இல்லாத ஒரு பாத்திரமாக பட்டது ஒரு சிறு கதையினுள். அவள் பெற்றோர் ஒரு நாள் அவளை பள்ளியில் இருந்து அழைத்து வர தாமதிக்கிரார்கள். அதுவும் அதன் பின் அவள் அப்பாவிற்கும் நடக்கும் தொலைபேசி உரையாடல் தேவை இல்லை என்று பட்டது. மற்றபடி அனைவராலும் வாசிக்க தகுந்த வித்தியாசமான ஒரு கதைக்களம் கொண்ட ஒரு சிறு கதை.
No comments:
Post a Comment