மனநலம் என்பது பற்றி என்றும் படிக்க ஒரு ஆர்வம் எனக்கு இருந்தது. அப்பட்டி இருக்கையில் வாசிக்க கிடைத்த ஒரு புத்தகம் தான் இந்த 'அகக்கண்ணாடி'.
மனநலம் குறித்து பேசினாலே பைத்தியமா என்று கேட்கிற ஒரு பழக்கம் இந்த நவீன உலகத்திலும் இருக்கத்தான் செயகிறது. அதை உடைக்க முற்பட்டுகிறார் Dr.ரைஸ். மனநலம் என்ற ஒரு சொல்லுக்குள் எதனை விதமான கோட்பாடுகள் உள்ளன என்று அவர் சொல்லியிருக்கிறார். அனைத்தும் அல்ல என்றாலும் நாம் சுற்றும் காண நேரும் பலதை பற்றி சொல்கிறார். மதுரையில் மற்றும் நெல்லையில் அவர் படிக்கும் தருணங்களிலும் தற்பொழுது சிட்னியில் அவர் எதிர்கொண்ட நோயாளிகளுடன் உண்டான சுவாரஸ்யமான சம்பவங்களை உதாரணமாக வைத்து எழுதப்பட்டது இந்த புத்தகம். Schizoid, schizophrenia, OCD, borderline personality என்றவற்றை போல் பல நோய்களுக்குண்டான வேற்றுமைகள் எளிமையான விளக்கங்களின் வாயிலாக நம்மால் கண்டுகொள்ள முடியும். நகைச்சுவையான அவருடைய எழுத்துக்களால் மாற்று மருத்துவம் மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து பேசுகிறார். வாசிப்பு சுவாரஸ்யத்தையும் தக்க வைத்திருக்கிறார்.
முதலில் சொன்னது போல் மனநலம் குறித்து இன்றும் குறுகிய மனப்பான்மை கொண்ட இந்த யுகத்தில் இத்தகைய ஒரு புத்தகம் நமக்கு ஒரு நல்ல விழிப்புணர்வாக அமைகின்றது. இதை சுவாரஸ்யமாக அதே நேரம் பயனுள்ள ஒரு புத்தகமாய் வெளியிட்ட Dr.ரைஸ்-இன் முயற்சி பாராட்டத்தக்கதே. மனநலம் குறித்து வரும் பிரச்சனைகள் எல்லாமே ஒரு நோயாக கருதி மக்கள் மருத்துவர்களை அணுக முற்படத்தான் வேண்டும். அது போல இத்தககய உபாதைகளை பைத்தியம் என்று கிண்டல் செய்யாமல் மற்றவர்களும் இவர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும்.
No comments:
Post a Comment