Monday 15 April 2024

ராஜகேசரி - கோகுல் சேஷாத்திரி - புத்தக விமர்சனம்

 

               கதைகள் என்றுமே பல விதங்களில் சொல்ல படுகின்றன. இருந்தாலும் துப்பறியும் கதைகள் மீது எனக்கு உள்ள நாட்டம் வேறு எதிலும்  இல்லை. அதுவும் இந்த புத்தகத்தின் கருவை வசித்த பொது வித்தியாசமான ஒரு துப்பறியும் கதையாக பட்டது.

               ராஜ ராஜ சோழனின் பிறந்தநாள் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திர நாளன்று வரவுள்ளது. தலைநகரில் அதற்கான விமரிசையான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் அதே நேரத்தில் ராஜாவை கொலை செய்ய ஒரு சாதி திட்டம் தீத்தப்பட்டு வருகிறது என்று ஒரு ரகசிய தகவல் அமைச்சர்களுக்கு வருகின்றது. இதே வேலையில் தலைநகரத்தில் இருந்து சில காத டூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வீரன் ஒருவர் மர்மமான முறையில் கொள்ள படுகிறான். அந்த தகவலை அம்பலவாணர் தலைநகருக்கு கொண்டு செல்ல அங்க அவருடன் இணைந்து சேனாதிபதி பரமன் மழபாடியார் இந்த திட்டத்தின் வேர் வரை செல்ல யத்தனிக்கிறார். ஆனாலும் அது அவ்வ்வளவு எளிதல்ல. யார் இந்த சதிகாரர்கள் - பாண்டியர்களா இல்லை சேரர்களா?சதிகாரர்கள் ஆசை நிறைவேறுமா? சோழநாட்டு பிரமுகர்களால் இதனை முறியடிக்க இயலுமா? மழபாடியார் ராஜ ராஜனை காப்பாற்றுவாரா? இதுவே கதைக்களம்.

                இந்த புதினத்தில் என்னை மிகவும் கவர்ந்தது இதன் கதைக்களம் தான். ஏற்கனவே இந்த எழுத்தாளரின் பைசாசம் இது  போன்று தான். அதாவது பண்டைய காலத்தில் நடக்கும் ஒரு குற்றமும் அதனை துப்பு துலக்கி தீர்வை காணும் அந்த காலத்து நபர்களும். இந்த மாதிரி இரண்டையும் அருமையாக இணைத்துள்ளார் எழுத்தாளர். 'ஹிஸ்டாரிகல் பிக்ஷன்' என்ற ஒரு வகை புனைவை  மேற்கொண்டுள்ளார்.கற்பனையுடன் உண்மையும் கலந்து எழுதப்படும்பொழுது நம் வாசிப்புக்கு இன்னும் மெருகேறுகின்றது. கோகுல் அவர்களின் எழுத்து நடையும் கற்பனையும் நம்மை அந்த காலத்துக்கே கொண்டு சென்று அம்பலவாணர் மற்றும் மழபாடியார் இவர்களுடன் இணைந்து கதையின் முழு ஓட்டத்தையும் உடனிருந்து கண்டு கழிக்கிறோம். முக்கியமான கதைமாந்தர்கள் சிலவர்களே என்றாலும் நிறையவே சின்ன சின்ன பாத்திரங்கள் வந்து செல்கின்றன. வாசிப்பின் ரசனையை அது மேலும் யதார்த்தமாக்கிறது. அங்கு அங்கு வரும் சங்க காலத்து வட்டார வழக்கு அழகு.            

                எனக்கு இது வேகமான வாசிப்பிப்பாகவே அமைந்தது. அதே நேரத்தில் விறுவிறுப்பான ஒரு திரைப்படம் கண்ட நிறைவு. ஒரு வேகமான சுவாரஸ்யமான வாசிப்பை விரும்புகிறவர்கள் இதை கட்டாயம் படிக்கலாம்.






கோகுல் சேஷாத்திரியின் வேறு படைப்புகளின் விமர்சனங்களை காண கீழ் காணும் இணையதள இணைப்பில் செல்லவும்.

No comments:

Post a Comment