Friday, 24 January 2025

ஆளண்டாப் பட்சி - பெருமாள் முருகன் - புத்தக விமர்சனம்


                    பெருமாள் முருகன் - என் வாசிப்புக்கும் சிந்தனைக்கும் ஒரு புதிய கோணத்தை தந்தவர் இவர். தி. ஜானகிராமன் மற்றும் ஜெயகாந்தனுக்கு பிறகு என்னை வாசிப்பின் வேறு தளங்களுக்கு எடுத்து சென்றவர் இவர். சென்ற வருடம் அவரின் புத்தகங்கள் எதுவும் வசிக்கவில்லை என்பதால் இந்த வருடம் அவரிடம் இருந்தே ஆரம்பிக்க நினைத்ததின் விளைவு தான் இந்த வாசிப்பு.

                    முத்து தன குடும்பத்தின் கடைக்குட்டி. செல்லமாக வளந்தவன் பாக பிரிவினையின் போது குடும்பத்திற்கு வேண்டாதவனாகிறான். ஒரு கட்டத்தில் தன மனைவிக்கு ஒரு அவமானம் நேர முத்து தன பிறந்த ஊரை விட்டு இடம்பெயர்ந்து புது இடத்தை தேடி செல்வதே இந்த புதினம்.

                    என் வரையில் ஒரு எழுத்தாளரின் வெற்றி என்பது தன் வாசகனை அந்த கதைக்குள்எப்படி இழுத்து செல்ல முடியும் என்பதில் தான். தனது ஒவ்வொரு புதினத்தில் அந்த அனுபவத்தை எனக்கு பெருமாள் முருகன் தருகிறார். இந்த கதையிலும் அப்படித் தான். என்னையும் முத்து மற்றும் குப்பண்ணாவுடன் புது இடத்தை தேடி செல்ல வைக்கிறார். கரிசல் நிலத்தை அறியாதநான் இந்த புதினத்தின் வாயிலாக அந்த நிலத்தை அறிந்து, அங்குள்ள மக்கள், விலங்குகள், உணவு முறை, பழக்க வழக்கங்கள் என பல விஷயங்களை அறிய நேர்ந்தேன். பாசம் என்ற ஒரு உணர்வு இருந்தாலும் பணம் சொத்து என்று வரும்போது பாசத்திற்கு இடமேது என்று பல சம்பவங்களை காண்கிரோம். அதுபோல் ஒன்றை இங்கும் நமக்கு காட்டுகிறார் எழுத்தாளர். இடம்பெயர்தல், புது இடத்தில் தந்து வாழ்க்கையை மாற்றி அமைத்தல் என்பது அவ்வளவு தத்ரூபமாக இங்கு காட்டியுள்ளார் பெருமாள் முருகன். நம்மில் சில பேர் இந்த அநுபவத்தை கடந்து சென்றிருப்போம் அல்லவா!

                    புது இடம் தேடுவது, வாங்குவது, வேறு ஊரில் வாஸ்த்த தன் வாழ்க்கையை பறித்து இங்கு மீண்டும் புதிதாக நட்டு வளர்த்தும் விதம் மிகவும் நன்றாக காட்டியுள்ளார் எழுத்தாளர்.  அவர் எழுத்து நடைநம்மை அந்த கதைக்குள் இழுத்து செல்கிறது. செல்லமாக வளர்ந்தாலும் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றி கொண்டு வாழ்க்கையை நிமிர்ந்த பார்வையோடு எதிர்கொள்ளும் முத்து மனதிற்குள் நிற்கிறார். அவனுக்கு பக்கபலமாக இருக்கும் குப்பண்ணன், மனைவி பெருமா, அண்ணன்கள், தாய் தந்தையர், ஊர் தலைவர் என்று பல பாத்திரங்கள் வந்து போகிறது. எந்த பாத்திரங்களும் சும்மா எழுதப்படவில்லை. பெருமா ஒரு முத்துச்சியான வலிமையான பெண்ணாக கட்டப்படுகிறாள். முத்துவின்  அப்பா அம்மா சொல்லும் சொற்கள், அவனது அண்ணனால் நிகழும் இன்னல் இவையெல்லாம் நமக்குள்ளும் ஊடுருவி வழியை தருகிறது. குப்பண்ணாவை முத்து நடத்தும் விதம், சரிசமமாக பார்க்கும் விதம், செய்யும் செயல்கள், பதிலுக்கு ஊரைவிட்டு வெளியே இது வரை செல்லாத அவன் எப்படி முத்துவுக்கு உதவுகிறான் என்பதை வாசிக்க அப்படி ஒருமகிழ்ச்சி. முத்துவின் சிறு பெண் மற்றும் பெருமாவின் பாட்டி என்று சில பக்கங்களே வந்து பாத்திரங்கள் கூட அவ்வளுவு பொறுப்பான, வலிமையானவை.

                    'மாற்றம் ஒன்றே மாறாதது' - இந்த நியதியை உண்மையாக்கும் விதம் மனிதர்கள் இடம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். படிப்பு, வேலை, பிரிவு, துக்கம், ஆரம்பம் என்று பல காரணங்கள். அதில் வரும் இன்னல்கள், அதை கடந்து போகும் தருணங்கள், அதனால் நம்முள் வரும் மாற்றங்கள் என்று பல விஷயங்களை பற்றி பேசி ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தை தருகிறந்து இந்த 'ஆளண்டாப் பட்சி'.






No comments:

Post a Comment